• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

IND vs NED: பலம் காட்டிய நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்ற இருவர் யார்?

Byadmin

Feb 19, 2026


நெதர்லாந்திற்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் 36வது போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

இந்தியாவுக்காக சிவம் துபே அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார், அதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும். அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி மூன்று ஓவர்களில் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

By admin