• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

IND Vs NZ: நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி மட்டுமே வீழ்த்தியது எப்படி?

Byadmin

Oct 25, 2024


இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனே நகரில் தொடங்கியது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அற்புதமான ஆஃப் ஸ்பின்னைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினர்.

197 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி அடுத்த 62 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து சுந்தர், அஸ்வின் பந்துவீச்சில் பறிகொடுத்தது.

By admin