• Mon. Jan 12th, 2026

24×7 Live News

Apdin News

IND vs NZ முதல் ஒருநாள் போட்டி: கோலி சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?

Byadmin

Jan 12, 2026


விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார்.

“விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.”

ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது.

இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

By admin