• Sun. Oct 20th, 2024

24×7 Live News

Apdin News

IND vs NZ முதல் டெஸ்ட்: சர்ஃபிராஸ் கான், ரிஷப் பந்த் இருவரும் அபாரம் – கடைசி நாள் யாருக்கு சாதகம்?

Byadmin

Oct 20, 2024


இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான்

இளம் வீரர் சர்ஃபிராஸ் கானின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் ரிஷப் பந்தின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்களைக் குவித்துள்ளது. இதையடுத்து, நியூஸிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கு சற்று குறைவானதாக தோன்றினாலும், இந்திய மைதானங்களில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையே வரலாறு கூறுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தால் நாளை ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆட்டத்தை திருப்பக் கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியிடம் இருப்பதால் ஆட்டத்தின் முடிவு என்பது மதில்மேல் பூனையாகவே இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இந்தியா - நியூசிலாந்து
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டெஸ்டில் சர்ஃபிராஸ் கான் முதல் சதம்

231 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இந்திய அணி இன்றைய 4வதுநாள் ஆட்டத்தைத் தொடங்கியது. சர்ஃபிராஸ் கான் 70 ரன்களிலும், ரிஷப் பந்தும் களமிறங்கினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றிருந்த நிலையில் இப்போது மீண்டும் இணைந்து ஆடினர்.

புதிய பந்தில், காலை நேரச் சூழலைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் நினைத்தனர்.

By admin