• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

IND vs NZ: மும்பை போட்டியின் முதல் நாளில் 3 விக்கெட் இழந்து திணறும் இந்தியா

Byadmin

Nov 2, 2024


இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 1) துவங்கிய இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விரைவாகவே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வில் யங் (71), டேரல் மிட்செல் (82) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சம். இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும்.

முதல் இன்னிங்ஸை சீராகத் தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது. அதன்பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, திடீரென அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

78 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

By admin