• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

IND vs SA: இந்திய பேட்டர்களின் பலவீனம் தென் ஆப்ரிக்காவுக்கு பலமாக மாறுமா? இரு அணிகளும் இன்று மோதல்

Byadmin

Feb 22, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - தென்னாப்பிரிக்கா, வருண் சக்கரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் சூப்பர் 8 ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 21) நடக்றது. கடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மீண்டும் இந்தப் பெரிய அரங்கில் மோதுவதால் இந்தப் போட்டியின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளையுமே வென்றிருக்கின்றன. இந்த அணிகள் இடம்பெற்றிருக்கும் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதில் வெஸ்ட் இண்டீசும் 4 போட்டிகளையுமே வென்றிருக்கிறது. ஜிம்பாப்வே 3 போட்டிகளை வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இப்படி அந்தப் பிரிவில் இருக்கும் அனைத்து அணிகளுமே தோல்வியே சந்திக்காதவை. இந்த சுற்றில் ஒவ்வொரு வெற்றியுமே அணிகளுக்கு முக்கியமானதாக அமையும்.

இன்றைய இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம், இரு அணிகளும் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன என்பது போன்ற விஷயங்களை அலசுவோம்.

இந்தியாவின் பிரச்னைகள்

இந்திய அணியைப் பொறுத்தவரை 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்தாலும், ஒருசில கவலை தரும் விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோரின் ஃபார்ம், ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் தடுமாற்றம், ஃபீல்டிங்கில் கேட்ச்களை கோட்டை விடுவது ஆகியவை குறித்து ரசிகர்கள், நிபுணர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.

By admin