• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

IND vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முக்கிய போட்டி – இந்தியா பந்துவீச்சு

Byadmin

Mar 1, 2026


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

2026 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மிகமுக்கிய சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸுக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது. இது சேஸிங்குக்கு சாதகமான மைதானம். ஆட்டம் போகப் போக ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், பனிப்பொழிவு இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு சேஸ் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

டாஸ் வென்றிருந்தால் தானும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்தார். அந்த அணியில் தொடக்க பேட்டர் பிராண்டன் கிங் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆல்ரவுண்டர் ராஸ்டன் சேஸ் ஹோப் உடன் தொடக்கவீரராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டாஸ் முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய “ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருக்கிறது. அதனால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். முதலில் பந்துவீசுவதால் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அதை நன்கு பயன்படுத்தி தாக்கம் ஏற்படுத்தக்கூடும்” என்று இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்தார்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

By admin