பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்தியா நல்ல தொடக்கத்தைப் பெற்றது. அபிஷேக் சர்மா வெறும் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா, அதிரடி தொடக்கத்தை வழங்கினர். இதனால் 3 ஓவர் முடிவில் இந்திய அணி 46 ரன்களை குவித்தது.
சஞ்சு சாம்சன் 2 சிக்ஸ் மற்றும் 1 போர் அடித்த நிலையில், 24 ரன்களுக்கு அவுட் ஆனார்.
சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இடையேயான முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் கூட்டணி இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான சிறந்த தொடக்க கூட்டணியாகவும் அமைந்தது.
அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் உடன் கூட்டணி சேர்ந்து அபிஷேக் சர்மா தனது அதிரடியை தொடர்ந்தார்.