• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

iPhone 16 ஐ தொடர்ந்து Google Pixel கைத்தொலைபேசி விற்பனை தடை!

Byadmin

Nov 3, 2024


கடந்த வாரம் iPhone 16 கைத்தொலைபேசி விற்பனையை தடைசெய்திருந்த இந்தோனேசியா, தற்போது Google Pixel கைத்தொலைபேசி விற்பனையையும் தனது நாட்டில் தடை செய்துள்ளது.

தமது நாட்டில் முதலீடு செய்வதற்கான நிபந்தனைகளை குறித்த கைத்தொலைபேசி நிறுவனங்கள் பின்பற்றவில்லை என இந்தோனேசியா நாட்டு வர்த்தக அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்டாசாஸ்மிடா கூறினார்.

இந்தோனேசியாவில் விற்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் கைத்தொலைபேசிகளில் 40 சதவீதம் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று.

அதனைப் பின்பற்றத் தவறியதால் iPhone 16 மற்றும் Google Pixel கைத்தொலைபேசிகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைத்தொலைபேசிகளை இந்தோனேசியாவுக்குள் கொண்டுவரலாம். ஆனால், அவற்றை விற்பனை செய்யமுடியாது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, இந்தோனேசியாவுக்குள் iPhone 16 மற்றும் Google Pixel கைத்தொலைபேசிகளை கொண்டுவரப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று Jakarta Globe செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒருவர் அதிகபட்சம் இரண்டு கைத்தொலைபேசிகளை வைத்திருக்கமுடியும். அவற்றைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தமுடியும். எனினும், குறித்த கைத்தொலைபேசிகளை மற்றவர்களுக்கு விற்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

By admin