• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சவுரப் துபே: கே.கே.ஆர். அணி அறிவிப்பு

Byadmin

Mar 23, 2026


ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 10 அணிகளும் போட்டிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே, கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகிக் கொண்டிருப்பதால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முஸ்தபிசுர் ரகுமான் ஏற்கனவே வெளியேற்றப்பட்டார். அதன்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இலங்கை வீரர் மதீஷா பதிரனா ஏப்ரல் முதல் பாதி வரை பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் ஆகாஷ் தீப் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சவுரப் துபேயை மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

By admin