ஆர்.சி.பி. அணிக்கு துவக்க வீரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோடி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பில் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் தன் பங்கிற்கு 29 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் 48 ரன்கள் (1 பவுண்டரி, 6 சிக்சர்கள்) குவிக்க, டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் (3 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) விளாசினர். போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 250 ரன்களை குவித்தது.