• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | மிட்செல் மார்ஷ் போராட்டம் வீண்… 40 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

Byadmin

Apr 23, 2026


ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 32-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஜெயஸ்வால் 12 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். இவர் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 43 ரன்களை அடிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது.

எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஆயுஷ் பதோனி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர் 41 பந்துகளில் 55 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். எனினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிவில் லக்னோ அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், நன்ட்ரி பர்கர் மற்றும் ப்ரிஜெஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜ மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

By admin