• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | ஹர்ஷித் ராணா, பதிரனாவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் விலகல்: கொல்கத்தா அணிக்கு கடும் பின்னடைவு

Byadmin

Mar 21, 2026


ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் 10 அணிகளும் போட்டிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகிக் கொண்டிருப்பதால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முஸ்தாபிஜுர் ரகுமான் ஏற்கனவே வெளியேற்றப்பட்டார். அதன்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இலங்கை வீரர் மதீஷா பதிரனா ஏப்ரல் முதல் பாதி வரை கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆகாஷ் தீப் இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக மாற்று வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னும் தேர்வு செய்யவில்லை.

ஹர்ஷித் ராணா, பதிரனா (தொடரின் முதல் பாதி) இல்லாத நிலையில் ஆகாஷ் தீப் தற்போது விலகியிருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

By admin