• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026: 20 பந்தில் அரைசதம்: 61 ரன்னில் படிக்கல் அவுட்

Byadmin

Mar 28, 2026


ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, ஆர்சிபி அணி களமிறங்கியது. பில் சால்ட் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தேவ்தத் படிக்கல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு விராட் கோலி ஒத்துழைப்பு அளித்தார்.

இந்நிலையில், அதிரடியாக ஆடிய படிக்கல் 20 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

By admin