• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

Iran War | இந்திய பெருங்கடலில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல்: ஈரானுக்கு இங்கிலாந்து கண்டனம்/ Britain condemns reckless attacks after Iran fires missiles at UK-US Diego Garcia base in Indian Ocean

Byadmin

Mar 21, 2026


ஈரான் எல்லையில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ளது இங்கிலாந்தின் டியாகோ கார்சியா தீவு. இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த இங்கிலாந்த அனுமதித்திருந்தது.

டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளம், மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதில் அமெரிக்காவிற்கு உதவுகிறது.

இங்கிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய குண்டு வீச்சு விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் போர்க் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

By admin