0
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B. பாலாஜி நியமனம்
இங்கிலாந்தின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், லேண்ட் ரோவர் (jaguar, land rover) தனது புதிய CEO ஐ நியமித்துள்ளது.
டாடா குழுமம் வசமிருக்கும் இந்நிறுவனத்தின் CEOவாக முதல் இந்தியர் அதுவும் தமிழரான P.B.பாலாஜி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEOவாக இருக்கும் அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEOவாக பாலாஜி, நவம்பர் மாதத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
2017ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார்.
பாலாஜி, தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.