• Fri. Nov 22nd, 2024

24×7 Live News

Apdin News

Judicial Seperation: விவாகரத்து செய்யாமலேயே தம்பதிகள் பிரிய முடியுமா?

Byadmin

Nov 22, 2024


விவாகரத்து செய்யாமல் தம்பதிகள் பிரிந்திருக்கலாம்: இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தம்பதிகள் விவாகரத்து பெறாமல் தனியாக வாழ்வதற்கு ஜூடிசியல் செபரேஷன் (நீதிமன்ற மணப்பிரிவு) உதவும்

திருமணமான தம்பதிகள் அந்த உறவிலிருந்து வெளிவர நினைக்கும் போது, விவாகரத்து மட்டுமல்லாமல் வேறு சில தேர்வுகளும் இருக்கின்றன. அவ்வாறான‌ தேர்வுதான் ‘ஜூடீசியல் செப்பரேசன்’ (judicial seperation). மணமுறிவு‌ அல்லாத தனிவாழ்க்கைக்கு இது வாய்ப்பளிக்கிறது.

உறவுகள் எப்போதும் எளிதானவை அல்ல, எல்லா நேரங்களிலும் அவை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வது சிக்கலானதாக இருக்கலாம். சில நேரம் சற்று தள்ளி இருந்தால் போதும் என்று தோன்றலாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியிருக்கும். இது போன்ற தருணங்களில், தம்பதிகள் விவாகரத்து பெறாமல் தனியாக வாழ்வதற்கு ஜூடிசியல் செபரேஷன் (நீதிமன்ற மணப்பிரிவு) உதவும்.

இவ்வாறு‌ தனித்து வாழ்வோர் சட்டப்படி திருமணமானவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், இவர்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடியாது.

பிள்ளைகளை ஒன்றாக வளர்க்க வேண்டும், ஆனால் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ விருப்பமில்லாத பலர் இந்த முடிவை தேர்ந்தெடுக்கின்றனர்.

By admin