• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

K2-18b: பூமி தவிர்த்து இன்னொரு கோளில் உயிர்கள் உள்ளதா? சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

Byadmin

Apr 17, 2025


கே2-18பி கோள், K2-18b planet

பட மூலாதாரம், Cambridge University

படக்குறிப்பு, இங்கு உயிர்கள் இருக்கலாம் என கூறப்படும் கே2-18பி கோளின் சித்தரிப்பு

மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த கிரகத்தில் கண்டுபிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இந்த கண்டுபிடிப்பு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

ஆனால், இந்த முடிவுகளை உறுதி செய்ய இன்னும் அதிக தகவல்கள் தேவை என, அந்த ஆய்வுக் குழுவினரும் சுயாதீன வானியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

By admin