• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

KKR Vs RR: 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் – ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்

Byadmin

May 4, 2025


ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம், Getty Images

ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின.

கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது என்ற போதிலும், அந்த அணி இன்னும் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிளே ஆஃப்க்கு முன்னேற அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வென்றாக வேண்டும்

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பவர்பிளேயில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தது. அபாயகரமான பேட்டரான சுனில் நரேனை இந்த போட்டியில் ராஜஸ்தான் 11 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. எனினும் ரஹ்மானுல்லா மற்றும் அஜிங்க்யா ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மற்ற பேட்டர்கள் யாருமே ஏமாற்றாமல் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

By admin