• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

KKR Vs SRH: நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்கரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

Byadmin

Apr 3, 2026


நம்பிக்கை இழந்துவிட்டாரா வருண் சக்கரவர்த்தி? சமீபத்திய தடுமாற்றத்தின் காரணம் என்ன?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் தொடரில் வீசிய 6 ஓவர்களில் வருண் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை (கோப்புப் படம்)

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

முதலில் பந்துவீசிய கேகேஆர், 20 ஓவர்களில் 226 ரன்களை விட்டுக்கொடுத்தது.

இந்தப் போட்டியில் பந்துவீசிய இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி 2 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் மட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே வருண் சக்கரவர்த்தி தன் பந்துவீச்சால் தாக்கம் ஏற்படுதத் முடியாமல் தடுமாறுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டர்கள் அவருக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்தி ரன்களைக் குவிக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று தொடங்கிய பிறகான 7 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியின் எகானமி 12.16. இந்த 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அவர் பத்துக்கும் குறைவான ரன்ரேட்டில் பந்துவீசியிருக்கிறார்.

By admin