• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

Malvika Bansod | ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மாளவிகா பன்சோத்

Byadmin

Mar 20, 2026


ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், மலேசியாவின் வோங் லிங் சிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மாளவிகா பன்சோத் 24-22, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சக நாட்டு வீராங்கனையான அன்மோல் கர்பை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் ஒரு போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா, கனடாவின் வெங் யூ சாங்கை 21-11, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

By admin