0
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளைத் தேடும் நடவடிக்கைகளை மீண்டும் தொடர மலேசிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இம்முறை இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் தேடுதல் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் Ocean Infinity நிறுவனம், மலேசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
MH370 விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அந்நிறுவனத்துக்கு மலேசிய அரசாங்கம் கட்டணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
MH370 விமானமானது, 2014ஆம் ஆண்டு 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ச்சிங் சென்றுகொண்டிருந்த போது, திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு, நடுவானில் மாயமானது.
இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முன்னர் பாரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் விமானம் குறித்துத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.