• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

MI vs KKR: மும்பை இந்தியன்ஸ் 13 ஆண்டாக தொடரும் தோல்விக்கு முடிவு கட்டுமா? சாதகமான 3 விஷயங்கள்

Byadmin

Mar 29, 2026


ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

2026 ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டது. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

இன்று (மார்ச் 29) நடக்கும் இரண்டாவது போட்டியில் ஐந்து முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சந்திக்கிறது.

இந்தப் போட்டி மும்பையின் வான்கெடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியால், 2013 சீசன் முதலாகவே எந்த சீசனின் முதல் போட்டியிலும் வெல்லவில்லை. இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த மோசமான தொடக்கங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா? அலசுவோம்.

13 சீசன்களாக தொடரும் தோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சீசனின் முதல் போட்டி என்றாலே அவர்களுக்கு சரியாகப் போகாது. 2013 முதல் 2026 வரை தொடர்ந்து 13 சீசன்களிலும் அந்தந்த சீசன்களின் முதல் போட்டிகளை அந்த அணி தோற்றிருக்கிறது.

By admin