• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

MI vs KKR: ரோஹித், பும்ரா, ஷார்துல் மூவரும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பியது எப்படி?

Byadmin

Mar 30, 2026


மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷார்துல் தாக்கூர், ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தன (கோப்புப் படங்கள்)

2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

வான்கெடேவில் நடந்த இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹர்திக் பாண்டியாவின் அணி.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அரைசதம் அடித்தனர். மும்பைக்காக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான்.

By admin