• Wed. May 28th, 2025

24×7 Live News

Apdin News

Miss World 2025: உலக அழகிப் போட்டிகளில் வெற்றியாளர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

Byadmin

May 27, 2025


உலக அழகிப் போட்டி, தெலங்கானா, ஹைதராபாத்

பட மூலாதாரம், missworld/insta

படக்குறிப்பு, உலக அழகி தேர்வு செய்யப்படுவது எப்படி?

72வது உலக அழகிப் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய போட்டி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே இந்தப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. உலக அழகிப் போட்டிகள் 1951ம் ஆண்டு ப்யூட்டி ‘வித் எ பர்பஸ் (Beauty with a Purpose)’ என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு கட்டத்திலும் கடும் போட்டி

மிஸ் இந்தியா நந்தினி குப்தா

பட மூலாதாரம், missindiaorg/instagram

படக்குறிப்பு, மிஸ் இந்தியா நந்தினி குப்தா

நடப்பு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் நந்தினி குப்தா உட்பட 108 நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

முதல்கட்ட போட்டிகளுக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் 10 பேர்(அமெரிக்கா மற்றும் கரீபியனில் இருந்து 10 பேர், ஆப்பிரிக்காவில் இருந்து 10 பேர், ஐரோப்பாவில் இருந்து 10 பேர், ஆசியா மற்றும் ஓசியானியாவில் இருந்து 10 பேர்), மூன்று கட்டங்களாக நடைபெறும் கால் இறுதி போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்,

By admin