• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

Newcastle வெடிப்பு சம்பவம்: இரண்டாவது சடலம் மீட்பு!

Byadmin

Oct 17, 2024


Newcastle நகரத்தில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமையை அடுத்து, இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, அந்நகர பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்புக் குப்பைகளின் நடுவிலிருந்த குறித்த சடலம், அவசரகால பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என்று கருதப்படுகிறது.

எனினும், சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மேற்படி வெடிப்புச் சம்பவத்தில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

“துரதிர்ஷ்டவசமாக தங்கள் வாழ்க்கையை இழந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் எண்ணங்கள் அதிகம் உள்ளன. சிறப்பு அதிகாரிகள் தங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தை ஒன்று உட்பட 6 பேர் வெடிப்பு சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வெடி சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.Newcastle வெடிப்பு சம்பவம்: இரண்டாவது சடலம் மீட்பு!Newcastle வெடிப்பு சம்பவம்: இரண்டாவது சடலம் மீட்பு!

 

By admin