நெல்லுக்கான ஊக்கத்தொகை நிறுத்த உத்தரவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை”. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று தெரிவித்து இருந்தார்.