• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

NZ vs SA டி20 மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து ஆடவர் அணியால் முடியாததை அதன் மகளிர் அணி சாதித்தது எப்படி?

Byadmin

Oct 22, 2024


டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தனது சக வீரர் ஜெஸ் காருடன்

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது.

நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது.

கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

By admin