• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

PBKS vs MI: பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வி – ஷ்ரேயாஸ் அணி சரிவுக்கான 5 காரணங்கள் என்ன?

Byadmin

May 15, 2026


PBKS vs MI, ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஏப்ரல் 25, 2026 – ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய சேஸை வெற்றிகரமாக அரங்கேற்றியது பஞ்சாப் கிங்ஸ். 265 என்ற மிகப் பெரிய இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து கம்பீரமாக வெற்றி பெற்றது அந்த அணி. அந்த வெற்றி இந்த சீசனில் அவர்களுடைய 6வது வெற்றியாக அமைந்தது. அப்போதுவரை 7 போட்டிகளில் விளையாடியிருந்த பஞ்சாப் கிங்ஸ் ஒன்றில் கூடத் தோற்காமல், 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

மே 14, 2026 – 19 நாள்கள் மற்றும் 5 போட்டிகள் கழித்து… இன்னும் அதே 13 புள்ளிகளுடன் தான் இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். விளையாடிய அந்த 5 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது அந்த அணி.

நேற்று (மே 14) மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி இன்னும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.

‘இந்த அணியைத் தோற்கடிக்கவே முடியாதா’ என்று கேள்விகள் எழுந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. அது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்று (மே 15) சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்றால், பஞ்சாப் கிங்ஸ் ஐந்தாவது இடத்துக்கும் தள்ளப்படும்.

இப்படி கடினமான சூழ்நிலைக்கு பஞ்சாப் கிங்ஸ் வந்தது ஏன்? அவர்களின் சரிவுக்குக் காரணமான 5 காரணங்களை அலசுவோம்.

By admin