• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

PBKS Vs RR: 10 ஆண்டுகளுக்குப் பின் பிளே ஆஃப் வாய்ப்பு? – படிப்படியாக முன்னேறும் பஞ்சாப்

Byadmin

May 19, 2025



ப்ளே ஆஃப் கனவில் அந்தரத்தில் தொங்கும் பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் அணியின் சஷாங் சிங் 59 ரன்கள் எடுத்தார்

ஜெய்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது, தேஷ்பாண்டே,மபாகா பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்டுகளை, 34 ரன்களுக்கு இழந்தது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தது இந்த போட்டியில் தான்.

By admin