• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

Precocious puberty: சில சிறுமிகள் 6 வயதிலேயே பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

Byadmin

Nov 12, 2024


Precocious puberty, சில சிறுமிகள் 6 வயதிலேயே பூப்படைவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

“எனது ஆறு வயது மகளுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று நினைத்து நான் பயந்தேன். சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட ஆரம்பித்தாள். இந்த மாற்றங்கள் என்னை கவலையடையச் செய்தன.” என்று விவரித்தார் அர்ச்சனா.

ஆறு வயது மகளின் தாயான அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.

அர்ச்சனாவின் கணவர் ஒரு விவசாயி. இவர்கள் தங்கள் வயல் அருகே ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். மகள் மூத்தவள்.

அர்ச்சனா தன் ஆறு வயது மகளின் உடலில் வித்தியாசங்களை பார்த்தார். அந்த சிறுமி, ஆறு வயதுக்கு ஏற்ற வளர்ச்சியாக இல்லாமல், பதின் வயது பெண் போல் தோற்றமளிக்க ஆரம்பித்தார். இதனால் அச்சத்தில் உறைந்த அர்ச்சனா, தன் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

By admin