ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஆர்.சி.பி. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகைளை விற்பனை செய்ய இரு அணி உரிமையாளர்களும் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், ஆர்.சி.பி. அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் விற்பனையாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க தொழில் அதிபர் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியுள்ளது.
இரு அணிகளும் சேர்த்து இந்திய பண மதிப்புக்கு சுமார் 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் ஐ.பி.எல். அணிகளின் மதிப்பு குறித்து கூறியதாவது:-
ஆர்.சி.பி. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விற்பனை ஒப்பந்தம், நம்பமுடியாத வகையிலான மதிப்பீடு. டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியின் பங்கில் 50 சதவீதத்தை 2019-ம் ஆண்டு நான் வாங்கியதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்குள் நுழைந்தேன். 50 சதவீதம் பங்கிற்காக நாங்கள் 550 கோடி ரூபாய் செலவு செய்ய, எனது அப்பாவை சம்மதிக்க மிகவும் கடினமான இருந்தது. தற்போது நான் மேதை போன்று தெரிகிறேன்.
இன்னும் 10 வருடத்திற்குள் ஒவ்வொரு அணியும் 4 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதன் மதிப்பீடு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறு பார்த் ஜிண்டால் தெரிவித்தார்.