• Sun. Apr 12th, 2026

24×7 Live News

Apdin News

RCB Vs MI: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி முதலில் பேட்டிங் – ஹேசில்வுட் இல்லை.

Byadmin

Apr 12, 2026


ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுமே தங்களின் கடைசிப் போட்டியில் தோற்றிருக்கின்றன

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுமே தங்களின் கடைசிப் போட்டியில் தோற்றிருக்கின்றன (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2020 சீசனின் 20வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கெடே மைதானத்தில் மோதுகின்றன.

இரண்டு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோற்றிருப்பதால் இந்தப் போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் இருப்பார்கள்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்குக் கம்பேக் கொடுத்த ஜாஷ் ஹேசில்வுட் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. முதல் போட்டியை வேறொரு ஆடுகளத்தில் விளையாடினோம், இதுவும் அதைப் போலவே இருக்கிறது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்வது எப்போதும் நல்லது. இது ஒரு முக்கியமான ஆட்டம் என்று நினைக்கிறேன். களமிறங்கி எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், ஆலோசனைக் கூட்டங்களில் பேசிய விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

By admin