• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

RCB vs RR: ‘மீண்டும் சூர்யவன்ஷி புயல்’ – ஆர்சிபி ஆட்டத்தை பறிகொடுத்தது எப்படி?

Byadmin

Apr 11, 2026


26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 16வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடந்தது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை அது தக்க வைத்திருக்கிறது.

மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18 ஓவர்களிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸ் செய்தது.

4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்தார் ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்தார் ரஜத் பட்டிதார் (கோப்புப் படம்)

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் வீசிய பவுன்சரை சமாளிக்க முடியாமல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஃபில் சால்ட்.

By admin