• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

Revenge Bedtime Procrastination: ஆண், பெண் இரு பாலரும் தூக்கத்தை தள்ளிப் போடுவது ஏன்?

Byadmin

Jan 15, 2025


Revenge Bedtime Procrastination

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

இரவில் எல்லோரும் தூங்கிய பிறகும் அலைபேசியை திறந்தபடி எதையாவது பார்க்கவும், வாசிக்கவும் தோன்றுகிறதா?. கண்கள் தாமே சோர்ந்து உறங்கும் வரை மனம் அமைதியிழந்தபடி உள்ளதா?

இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை. பகல் நேரத்தில் தனக்கான நேரம் கிடைக்காமல் வேலையிலும், மற்றவர்களின் அழுத்தத்திலும் ஆளாகக் கூடியவர்கள் இரவில் தூக்கம் இழந்து தனக்கு பிடித்ததைச் செய்து அதிலேயே மூழ்கிக் கிடப்பது இப்போது அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் இந்தப் போக்கினை Revenge Bedtime Procrastination (தூக்கத்தை தள்ளிப் போட்டு பழிவாங்குதல்) என்று அழைக்கிறார்கள்.

தெரிந்தே இவ்வாறு தூக்கத்தை தள்ளிப்போடுவது தனியாக ஒரு நோயில்லை என்றாலும், இந்த வாழ்க்கை முறை சார்ந்த சிக்கல் வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீங்களும் இதை செய்கிறீர்களா?

நீங்களும் இதை செய்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் ..

By admin