• Mon. Jan 20th, 2025

24×7 Live News

Apdin News

RG Kar: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை- குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை

Byadmin

Jan 20, 2025


(கோப்புப்படம்)

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சஞ்சய் ராய் (கோப்புப்படம்)

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ‘அரிதிலும் அரிதான’ ஒன்று என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார்.

இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.



By admin