1913-ம் ஆண்டு முதல் 1970-கள் வரையிலான சிறுகதைகளின் போக்கை இது ஆவணப்படுத்துகிறது.
மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது, ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நூலான இந்நூல், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முதல் ஐம்பது ஆண்டுகால வரலாற்றையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் விரிவாக ஆராய்கிறது.
சுமார் 896 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வு நூல், தமிழ் சிறுகதை உலகின் முக்கிய மைல்கற்களைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 1913-ம் ஆண்டு முதல் 1970-கள் வரையிலான சிறுகதைகளின் போக்கை இது ஆவணப்படுத்துகிறது.
இந்நிலையில் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் ‘தோழர்’ ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!
தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதெமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.