• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

Single Pasanga: எனக்கு நடந்த அவமானம்.. | பிளாகி ஸ்டார் மனம் திறந்த பேட்டி!

Byadmin

Dec 23, 2025


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சி பல கட்டத்தை கடந்து இறுதிக்கடத்தை எட்டி நேற்று கோலாகலமாக கிராண்ட் பினாலே நடைபெற்றது. இதில், கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் சாந்தினி ஜோடி டைட்டிலை வென்றனர். மேலும் இரண்டாவது இடத்தை ராகவேந்திரா மற்றும் பிரணிக்கா பெற்றனர். இதுகுறித்து பிளாகி ஸ்டார் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

Galatta Pink youtube சேனலுக்கு பிளாகி ஸ்டார் அளித்திருக்கும் பேட்டி

“நான் பிரபலமாக வேண்டும் என்று எப்போது நினைத்தேன் என்றால். நான் ஒரு சலூனுக்கு சென்றிருந்தேன். அந்த சலூன் மிக பிரபலமான சலூன். அந்த சலூனில் ஒரு பெரிய பணக்காரர் வந்திருந்தார். என்னை அவமானப்படுத்துவது போல நடந்து கொண்டு, அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். ஏனென்றால் அவரிடம் பெயர் இருந்தது, புகழ் இருந்தது, பணம் இருந்தது. அதனால் அன்றிலிருந்து தான் எனக்கு நாமும் பெயர், புகழ் பணத்தோடு இருக்க வேண்டும் என நினைத்து, தினமும் பலவிதமான கஷ்டங்களை பட்டு இன்று ஒரு பிரபலமாகி இருக்கிறேன். இப்போது நானே பல சலூன்களை திறந்து வைக்கிறேன். அன்று மட்டும அந்த அவமானம் எனக்கு நடக்கவில்லை என்றால், இன்னும் நான் பின்தங்கி தான் இருந்திருப்பேன் அன்று எனக்கு நடந்த அவமானத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்..”

“சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டி வெற்றி பெற்றது குறித்து பேசிய அவர், தங்கபாண்டி மிகவும் திறமையானவர். அவருடைய முயற்சியால் இன்று கூமாபட்டிக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் இன்னும் சரியாக செய்து இருக்கலாமே என்று நான் வருத்தப்பட்டதே இல்லை ஏன் என்றால், என்னால் முடிந்த கடுமையான உழைப்பை நான் அந்த நிகழ்ச்சியில் போட்டு இருக்கிறன். இதனால், டைட்டில் கைவிட்டு போனது பற்றி எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. இந்த நிகழ்ச்சிகள் மூலம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசையே இல்லை. ஆனால், ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட அழைத்தால் நிச்சயம் போவேன்” என்று பிளாகி ஸ்டார் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

By admin