• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

SmartWatch | மெட்டல் பாடி, ப்ளூடூத் காலிங் வசதி… சூப்பர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Byadmin

Mar 18, 2026


கோ-5 இன்கார்ப்பரேஷன்ஸ்-இன் தொழில்நுட்ப பிராண்டு டெக்மார்க்ஸ் (TecMarx) இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்- டெக்மார்க்ஸ் அல்ட்ரா வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் ஷீல்டு பாடி, IPX வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 2.19 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 30-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள், அழைப்புகள், குறுந்தகவல்களுக்கு நோட்டிஃபிகேஷன், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் பயன்படுத்த முடியும்.

டெக்மார்க்ஸ் அல்ட்ரா வாட்ச் அம்சங்கள்:

2.19 இன்ச் டச்-ஸ்கிரீன்

மெட்டல் ஷீல்டு டிசைன்

30-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

ஹார்ட் ரேட், ஸ்லீப் மற்றும் ஆக்டிவிட்டி மானிட்டரிங்

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். கனெக்டிவிட்டி

ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள்

2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

ஆறு மாதங்கள் வரை வாரண்டி

இந்திய சந்தையில் புதிய டெக்மார்க்ஸ் அல்ட்ரா வாட்ச் மாடலின் விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஆரஞ்சு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நடைபெறுகிறது.

By admin