தென் கொரியா: கார் பாக தொழிற்ச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் மூன்று மாடி கட்டிட தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின்போது சுமார் 170 தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனே தரைத்தளத்தில் உள்ளவர்கள் விரைந்து வெளிறினர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியது.
#BREAKING ⁰ Massive fire engulfs auto parts factory in Daejeon, South Korea — WATCH the insane plumes of black smoke billowing into the sky!⁰Yonhap: At least 50-55 injured (35 seriously), 14+ missing/unaccounted for. Explosion suspected; 240+ firefighters battling blaze,… pic.twitter.com/3gspaFjN31
— U R B A N S E C R E T S (@stiwari1510) March 20, 2026
சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 60 பேர் வரை காயங்களுடன் மீட்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழிற்சாலையில் இருந்த சுமார் 100 கிலோ அளவிலான அபாயகரமான இரசாயனங்களை தீயணைப்பு வீரர்கள் முதலில் வெளியேற்றினர்.
இல்லையெனில், இன்னும் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டு பாதிப்பு பலமடங்கு அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.