• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

SRH vs RR: சூர்யவன்ஷி சதம் வீண் – 229 ரன் இலக்கை சேஸ் செய்து ஹைதராபாத் வென்றது எப்படி?

Byadmin

Apr 26, 2026


சூர்யவன்ஷி சதம் வீண் - 229 என்ற இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இந்தப் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 25) நடந்தது. இந்த சீசன், இந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி இது.

காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை களமிறங்காமல் இருந்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற கம்மின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வேகப்பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே சன்ரைசர்ஸ் பிளேயிங் லெவனில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மதுஷன்கா, ஹர்ஷ் துபே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துஷார் தேஷ்பாண்டே மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 228 ரன்கள் எடுத்தது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.

By admin