• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

Strait of Hormuz | எரிபொருள் விலை உயர்வால் அப்செட் ஆகும் நாடுகள் சொந்த ஆயிலை பயன்படுத்துங்கள்: டிரம்ப்/ Trump says nations upset by high fuel prices should go get your own oil’ amid strait closure

Byadmin

Mar 31, 2026


ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக சென்றுவர தங்களுக்கு ஆதரவாக போர்க்கப்பல்களை அனுப்புங்கள் என்ற உலக நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், உலக நாடுகள் டிரம்பின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் “ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு உதவி புரிய ஆர்வம் இல்லாத கூட்டணி நாடுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அப்செட் ஆனால் உங்களுடைய சொந்த எண்ணெய்-ஐ பயன்படுத்துங்கள். அவர்கள் எங்களிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால், எங்களிடம் அதிக அளவில் எண்ணெய் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

By admin