• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இங்கிலாந்தை வென்றாலும் இந்தியாவுக்கு கவலை தரும் 4 விஷயங்கள் எவை?

Byadmin

Mar 7, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, சூர்யகுமார்

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இரண்டு நாயகர்கள் செயல்பட்டனர். அதில் ஒருவர் சஞ்சு சாம்சன், அவர் அபாரமாக 89 ரன்கள் எடுத்தார். இன்னொருவர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் இறுதி தருணங்களில் அற்புதமாக பந்து வீசினார்.

“இந்த விருது ஜஸ்பிரித் பும்ராவுக்குச் செல்ல வேண்டும். அவர் மட்டும் இல்லையென்றால், நான் இங்கே இருந்திருக்க மாட்டேன்.”

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கான பெருமையை ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சிற்கு அவர் வழங்கினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தாலும் கூட, கடைசி ஓவர் வரை அதன் வெற்றி உறுதியாகத் தெரியவில்லை.

கடைசி வரை பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்ந்து 499 ரன்கள் குவித்த ஒரு போட்டியில், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அவர் தான் ஜஸ்பிரித் பும்ரா.

By admin