• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தகர்த்துவிட்டதா?

Byadmin

Feb 24, 2026


டி20 உலகக் கோப்பை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அணியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடும் ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் அகேல் ஹொசைன்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை ( பிப்ரவரி 23 ) நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் விளாசிய அதிகப்படியான சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்வித்தன.

வெஸ்ட் இண்டீஸின் ஆட்டத்தை ரசித்தவர்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் விளாசிய ஒவ்வொரு பந்தும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கடினமான பாதையை உருவாக்கும் என்பதை அவர்கள் எண்ணி இருக்க மாட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை எடுத்தது. இது டி20 ஆடவர் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2007ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருப்பது டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினமாகிவிட்டது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 நிலவரம்

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன.

By admin