• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியாவின் 3 முக்கிய கவலைகள் ஜிம்பாப்வேவுக்கு எதிரான வெற்றியின் மூலம் தீர்ந்ததா?

Byadmin

Feb 27, 2026


இந்தியா - ஜிம்பாப்வே - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

இந்தத் தோல்வியின் காரணமாக ஜிம்பாப்வே அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இன்றைய போட்டிகளில் இந்தியா வெற்றியும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியும் சந்தித்திருப்பதால், இவ்விரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

கடந்த சில போட்டிகளாக இந்திய அணிக்கு சிக்கலாக இருந்த ஒரு சில விஷயங்கள் இந்தப் போட்டியில் பிரச்னையில்லாமல் சென்றிருக்கின்றன.

By admin