• Wed. Feb 11th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் முடிவெடுத்ததில் வங்கதேசத்தின் பங்கு என்ன?

Byadmin

Feb 11, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், வங்கதேசம், ஐசிசி

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாந்தோ (கோப்பு புகைப்படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் ஓர் அறிவிப்பை வெளியிட்டது, அதில் டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள போட்டியைத் தனது கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கிவிட்டது.

“இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் அரசு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 15 பிப்ரவரி 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பங்கேற்காது,” என அந்த நேரத்தில் பாகிஸ்தான் அரசு எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தது

வங்கதேசத்துடன் ‘ஒற்றுமையை’ வெளிப்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருந்தது.

அப்போது வங்கதேசமும், தனக்கு ஆதரவாக நின்றதற்காகப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்திருந்தது.

By admin