• Tue. Feb 10th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் சம்மதம் – வங்கதேசம் கூறியது என்ன?

Byadmin

Feb 10, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images

பாகிஸ்தான் அரசு தனது புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றதால், இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வருவாய் ஈட்டும் இந்தப் போட்டி, இலங்கையில் நடைபெறுகிறது.

கடந்த வாரம் பாகிஸ்தான் அரசு தனது அணியை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியதில் இருந்து போட்டி நடக்குமா இல்லையா என சந்தேகம் நிலவியது.

தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தொடரில் இருந்து விலகிய வங்கதேசத்திற்கு “ஆதரவு” அளிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

ஆனால், ஒரு வார கால இழுபறி மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் வங்கதேச வாரியத்தின் அறிக்கைகளுக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு தனது அணியை இந்தப் போட்டியில் விளையாடுமாறு உத்தரவிட்டது.

By admin