• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் கைவிடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

Byadmin

Feb 9, 2026


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் (கோப்புப் படம்)

    • எழுதியவர், மேத்யூ ஹென்றி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) அதிகாரிகள் சந்தித்தனர். அவர்கள், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது தொடர்பாக விவாதித்தனர். வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமும் இந்த சந்திப்பில் உடனிருந்தார்.

பாகிஸ்தான் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி சல்மான் நசீர் வரவேற்றுள்ளதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிபி தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜாவை லாகூர் விமான நிலையத்தில் பிசிபி தலைவரின் ஆலோசகர் அமீர் மிர் வரவேற்றார்.” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ளது.

அமினுல் இஸ்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வியை லாகூரில் சந்தித்துள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணியின் பாதுகாப்பு கருதி தாங்கள் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என, பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.

By admin