• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கலா? தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதால் புதிய நெருக்கடி

Byadmin

Feb 24, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - தென் ஆப்ரிக்கா, சூர்யகுமார், அபிஷேக் சர்மா, அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நவம்பர் 10, 2022.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக அன்றைய தினம்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது.

அதன்பிறகு, டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றது இந்தியா. இந்த காலகட்டத்தில் 2024-ஆம் ஆண்டு இந்திய அணி 17 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றது.

ஆனால், பிப்ரவரி 22-ஆம் தேதி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மோசமாக விளையாடி, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற சூப்பர்8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற 20 ஓவர்களில் 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.

By admin