• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மீண்டும் மோதுமா? இரு சாத்தியங்கள்

Byadmin

Feb 21, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கான அணிகள் முடிவாகிவிட்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத வாய்ப்புள்ளதா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

சூப்பர்-8 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளன. எனவே, இவ்விரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோத வேண்டுமானால், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டிகள் இன்று (பிப்ரவரி 21) தொடங்குகின்றன. லீக் போட்டிகளில் இருந்து தேர்வான 8 அணிகள் சூப்பர்-8 சுற்றில் இடம்பெற்றுள்ளன.

இந்த 8 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா மூன்று போட்டிகளில் விளையாடும்.

சூப்பர்-8 சுற்றின் குரூப் 1-ல் இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் 2-ல் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

By admin